இடைத்தேர்தலில் போட்டியில்லை ஏன்? – கமல் விளக்கம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளத. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக ஆகியன போட்டியிடவிருக்கின்றன. டிடிவிதினகரன் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் என்ற நாடகத்தில் மக்கள் நீதிமய்யம் பங்கெடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response