இடைத்தேர்தலில் போட்டியில்லை – உடனடியாக அறிவித்த டிடிவி தினகரன்

தமிழகத்தில் விக்கிரவாண்டி – நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேர்தல் நாள்: அக்டோபர் 21 ; வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24. என்று தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வந்தவுடன் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வந்ததும், அதிமுக சார்பில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்

ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23-ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்

என்று அதிமுக அறிவித்துள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது. அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நாங்குநேரியில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடக்கிறது.

Leave a Response