ட்விட்டரில் கொந்தளித்த தமிழ் மக்கள் – அமித்ஷா அதிர்ச்சி

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆளும் அதிமுக, திமுக உட்பட அனைத்துக்கட்சிகளும் இக்கருத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தன.

இவற்றைவிட சமூக வலைதளங்களில் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தங்கள் கோபங்களைக் கொட்டித்தீர்த்தனர்.

ட்விட்டர் சமூக வலைதளத்தில், ‘ இந்தியைத் திணிக்காதே’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க ஆகிய ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்டாகின.

இந்தி ஆதிக்கத்தை நிறுத்து என்ற ஹேஷ்டேக் உலக அளவிலும் ட்ரெண்டானது.

இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகளைத் தாண்டி தமிழ் மக்கள் கொந்தளித்த இந்த நிகழ்வால் அமித்ஷா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response