ரூ 2000 நோட்டு – ஆர் பி ஐ புதிய முடிவு

2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.1,000 , ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினர். இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2000- பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-18 நிதியாண்டின் போது 6,72,600 கோடி அளவிற்கு இருந்த இதன் எண்ணிக்கை 2018-19 ஆம் ஆண்டில் 6,58,200 ஆக குறைந்துள்ளது. சுமார் 14,400 கோடி அளவிற்கு அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் மதி்ப்பு 2018 ஆம் வருட நிதியாண்டில் 37 சதவீதத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு நிதியாண்டில் 39 சதவீதமாக உள்ளது. மேலும் பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளின் மதிப்பு 43 சதவீத்தில் இருந்து 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆர்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் ரூ. 2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response