ஐந்துநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஐந்துநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆண்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்களிலேயே ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. ரஹானே 102 ரன்களும், விஹாரி 93 ரன்களும் எடுத்தனர்.

419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பும்ரா ஏழே ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்து மேற்கிந்திய தீவு அணியை திணறடித்தனர்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஐந்துநாள் போட்டித் தொடரில் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Response