42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பூப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் ‘நம்பர்-5’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4 ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார். முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2 ஆவது செட்டை 21-7 என தன் வசப்படுத்தினார்.

மொத்தம் 36 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

தவிர இது, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5 ஆவது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்தார்.

பூப்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற சிந்துவுக்கு அரசியல் கட்சிகளும் விளையாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றன்ர்.

Leave a Response