மாநில உரிமை பறிப்பு மக்கள் நலன் பாதிப்பு – பாஜக அரசின் அவசரகதியிலான 30 மசோதாக்கள்

2019 ஜூன் 17 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 7 ஆம் தேதி வரை நடந்த நாடாளுமன்ற அமர்வில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு, குடியரசுத் தலைவர் உரை மற்றும் 2019 நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகியவை ஒருங்கே நடைபெற்றன.

ஜூன் 26 ஆம் தேதி முடிந்திருக்க வேண்டிய இந்த அமர்வு, ஆகஸ்டு 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதற்குக் காரணம், இந்த அமர்வில் அவசரம் அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்ட 38 மசோதாக்களில் (நிதி மற்றும் ஒதுக்கீட்டு மசோதாக்கள் நீங்கலாக) 28 மசோதாக்கள் இந்த அமர்விலேயே நிறைவேற்றப்பட்டதுதான்.

பாஜக அரசுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால் இது நடந்திருக்கிறது.

ஜூலை, ஆகஸ்டு 2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

1. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்து ஜம்மு-காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்ற இந்த மசோதா வகை செய்கிறது.

2. உச்ச நீதிமன்றம் (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31 இல் இருந்து 34 ஆக அதிகரிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

3. நுகர்வோர் பாதுகாப்பு மசோதா

நுகர்வோர்களின் உரிமைகளை வரையறை செய்து அவர்களின் உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்க, குறை தீர்க்கும் அமைப்புகளை உருவாக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைக்கவும் வகை செய்கிறது.

4. பொது வளாகங்கள் (சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றம்) சட்டத் திருத்த மசோதா

அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாகக் குடியிருப்பவர்களை வெளியேற்றத் தேவையான வழிமுறைகளைத் தெளிவுபடுத்துகிறது.

5.மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா

சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிப்பது ஓட்டுநர் உரிமம் பெற, பதிவு செய்ய உள்ள விதிமுறைகளில் மாற்றம் ஆகியவகைகளுக்கான கொள்கைகளை வகுக்கிறது.

6. தேசிய மருத்துவ ஆணைய மசோதா

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை ஒழுங்குபடுத்த தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக ஒரு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்கிறது.

7. கூலிச்சட்டம்

குறைந்தபட்ச கூலிச்சட்டம் 1948, கூலி அளித்தல் சட்டம் 1936, போனஸ் அளித்தல் சட்டம் 1965 மற்றும் சம ஊதிய சட்டம் 1976 ஆகிய சட்டங்களை ஒருங்கிணைக்கிறது.

8. பயன்பாட்டில் இல்லாத சட்டங்களை இரத்து செய்யும் மசோதா

பயன்பாட்டில் இல்லாத 58 சட்டங்களை இரத்து செய்ய வகை செய்கிறது. இவற்றில் 46 அடிப்படை சட்டங்கள், 12 திருத்தப்பட்ட சட்டங்கள் அடங்கும்.

9. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத் திருத்த மசோதா

பயங்கரவாதக் குற்றங்களை புலனாய்வு செய்யவும், வழக்கு தொடரவும் நடைமுறையில் உள்ள சட்டத்தைத் திருத்த வகை செய்கிறது.

10. இந்திய விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்டத் திருத்த மசோதா

பெரிய விமான நிலையங்களை வகைப்படுத்துவதற்கான வரம்பை அதிகரித்து குறிப்பிட விமான நிலையங்களுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்ய வழிமுறைகளை ஏற்படுத்துகிறது

11. திவால் சட்டத் திருத்த மசோதா

ஒரு நிறுவனத்தை திவால் செய்ய காலக்கெடு விதித்து, கடன் கொடுத்தவர்களுக்குக் குறைந்தபட்சத் தொகை கிடைக்க வகை செய்கிறது

12. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத் திருத்த மசோதா.குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுகான தண்டனைகளை கடுமையாக்குகிறது.

13. நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான சட்டத் திருத்த மசோதா

நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான சட்டம் 1996-இல் திருத்தம் செய்து இந்திய சமரச கவுன்சில் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்க வகை செய்கிறது.

14. கம்பெனிகள் சட்டத் திருத்த மசோதா

கடன்களைச் செலுத்தாத பிரிவில் சில குற்றங்களை மறு வரையறை செய்கிறது. சில ஒப்புதல் அளிக்கும் அதிகாரங்களை தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் இருந்து மத்திய அரசுக்கு மாற்ற வகை செய்கிறது.

15. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா

எழுத்துப்பூர்வமான, எலக்ட்ரானிக் வடிவ மற்றும் அனைத்து வகையான உடனடி முத்தலாக் பிரகடனங்கள் அனைத்தும் செல்லாது மற்றும் சட்ட விரோதமானவை என்று ஆக்குகிறது.

16. ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்கள் தடைச் சட்ட மசோதா

ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதித் திட்டங்களைத் தடை செய்ய ஒரு அமைப்பை உருவாக்கி முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க வகை செய்கிறது

17. தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா

மத்திய, மாநில தகவல் ஆணையர்களின் சம்பளம், பதவிகளுக்கான காலக்கெடு மற்றும் விதிமுறைகளை திருத்த வகை செய்கிறது.

18. தேசிய புலனாய்வு நிறுவன சட்டத் திருத்த மசோதா

தேசிய புலனாய்வு நிறுவனத்தின் அதிகார வரம்பையும், அதன் விசாரணைக்கு உட்பட்ட குற்றங்களின் பட்டியலையும் மாற்றி அமைத்து செயல்பாட்டில் உள்ள சட்டங்களைத் திருத்தி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வகை செய்கிறது.

19. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா

மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை வரைமுறை செய்து அதன் நிர்வாகம் மற்றும் நிதிநிலை சம்பந்தப்பட்ட அதிகாரங்களை அதன் செயலாளருக்கு அளிக்க வகை செய்கிறது.

20. டெல்லி பன்னாட்டு சமரச மைய மசோதா

தன்னாட்சி அதிகாரம் பெற்ற தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஒரு சமரச மையத்தை உருவாக்கி இந்தியாவில் சமரச செயல்பாடுகளை மேலாண்மை செய்ய வகை செய்கிறது. இந்த மையம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு என்று வகைப்படுத்தப்படும்.

21. மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா

ஆந்திர பிரதேசத்தில் ஒரு புதிய மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்கிறது.

22. பல் மருத்துவர்கள் சட்டத் திருத்த மசோதா

பல் மருத்துவர்கள் சட்டம், 1948 இன் கீழ் உருவாக்கப்பட்ட பல் மருத்துவ கவுன்சில்களில் இருந்து சில வகை பல் மருத்துவர்களின் பிரதிநிதிகளை நீக்க வகை செய்கிறது.

23. ஆதார் மற்றும் இதர சட்டத் திருத்த மசோதா

ஆதார் விவரங்களை இணையம் அல்லாத முறையில் சரிபார்க்க வகை செய்கிறது. ஒருவர் வங்கி மற்றும் தொலைபேசி சேவைகள் பெற தேவையான தகவல்களை அளிக்க, ஆதார எண்ணை தன்னிச்சையாக அளிக்க வகை செய்கிறது.

24. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்த மசோதா

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை இரண்டு வருடங்களில் உருவாக்க வகை செய்கிறது.

25. மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீடு) சட்ட திருத்த மசோதா

மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், சமூகரீதியாக கல்விரீதியாக பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமாக பிரிவினர் ஆகியோர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வகை செய்கிறது.

26. ஹோமியோபதிக்கான மத்திய கவுன்சில் சட்ட திருத்த மசோதா

மத்திய கவுன்சிலை மாற்றி அமைக்க அளிக்கப்படும் காலக்கெடுவை ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்களாக மாற்ற வகை செய்கிறது.

27. ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா 2019

பன்னாட்டு எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வசிப்பவர்களுக்கு இணையாக இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது.

28. சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத் திருத்த மசோதா

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2015 இல் திருத்தம் செய்து தனி நபர் என்ற வரைமுறையில் மேலும் இரண்டு பிரிவினரை சேர்க்கவகை செய்கிறது.

29. நிதிநிலை மசோதா (எண் 2)

2019-20-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை முன்மொழிவுகளை செயல்படுத்த வகை செய்கிறது.

30. நிதி ஒதுக்கீடு (எண் 2) மசோதா

தொகுக்கப்பட்ட இந்திய நிதியில் இருந்து செலவுகளைச் செய்ய அதிகாரம் அளிக்கிறது.

மேற்கண்ட மசோதாக்கள் 2019 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டன

(தகவல் : மக்களவை மற்றும் மாநிலங்கவை மசோதாக்கள், சுற்றறிக்கைகள், பி.ஆர்.எஸ்)

பட்ஜெட் கூட்டத்தொடரில், 25 மசோதாக்கள் (66 சதவீதம்) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து நாட்களில் விவாதிக்கப்பட்டன. மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களும், மக்களவையில் ஒரு மசோதாவும் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

சராசரியாக ஒரு மசோதா மக்களவையில் 3.6 மணி நேரமும், மாநிலங்களவையில் 3.3 மணி நேரமும் விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் சட்டத்தை (1954) மேலோங்கும் குடியரசுத் தலைவர் ஆணை ஒன்றை மத்திய அரசு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியது.

பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பல சட்டத்திருத்தங்கள் முழுமையான விவாதங்கள் கூட இல்லாமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றில் பெருமளவு சட்டங்கள் வெகு மக்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியது என்கிற விமர்சனங்களும் பல மசோதாக்கள் மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடியன என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

Leave a Response