ஊழல் அரசியல் செய்யும் ஜெயலலிதா தோற்கவேண்டும்–பழ.நெடுமாறன்.

சென்னை ராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு அளிப்பது என தமிழர் தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி சேருவது இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ள முடிவை பாராட்டுகிறேன். அதிகார பலம், பண வலிமை ஆகியவற்றை எதிர்த்தும், ஊழல் அரசியலுக்கு எதிராகவும் நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Response