பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு நிர்மலா சீதாராமனை கரித்துக் கொட்டும் மக்கள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன்படி, லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.73.19க்கும், டீசல் விலை ரூ.67.96க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்து உள்ளது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5 பைசா 10 பைசாவாகக் குறைத்தார்கள் இப்போது ஒரேயடியாக 2.57 ஏற்றிவிட்டார்கள் என்று மக்கள் புலம்புகிறார்கள். இதுதான் ஓட்டுப் போட்ட மக்களுக்குப் பரிசா? என நிர்மலா சீதாராமனைக் கரித்துக்கொட்டுகிறார்கள்

Leave a Response