இலங்கையை வென்று முதலிடம் பிடித்த இந்தியா

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டியில், இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொணது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில் கருணாரத்னே 10 ரன்னிலும், குசல் பெரேரா 18 ரன்னிலும், பும்ரா வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினர்.

அடுத்து வந்த குசல் மென்டிஸ் 3 ரன்னிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்னிலும் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் மற்றும் திரிமன்னே நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர். இதில் திரிமன்னே 53 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த தனஞ்ஜெயா டி சில்வா, மேத்யூஸ் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது.

தொடர்ந்து தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம், அணியை சரிவிலிருந்த மீட்டு சதம் அடித்து அசத்திய மேத்யூஸ் 128 பந்துகளில் 113 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய திசிரா பெரேரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்னுடனும், இசுரு உதனா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 1 விகெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை தொடர் ஒன்றில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். மேலும் கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

Leave a Response