கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேசு மனைவி விபத்தில் மரணம்.
இயற்கையின் மீதான அளவுகடந்த காதலன் மருத்துவர் ரமேசு, ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கான தனது பங்களிப்பைக் கொடுத்து வருபவர்.
நேற்றைய நாளையும் தன் மனைவி இறந்த நிலையிலும் சமூக பங்களிப்போடு கடந்தார்.
அவர், தன் மனைவி மற்றும் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது ஆனைகட்டி மலைப்பகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்புக்கு இடையே செயல்பட்டு வந்த மதுபானக்கடை (டாஸ்மாக்) கடையின் அருகில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களால் பலமாக மோதி மருத்துவர் ரமேசு மனைவி மரணமடைந்தார்.
மகள் கடுமையான விபத்தின் காரணமாக கால் எலுப்புகள் கை, முகம் என கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அந்த நிலையிலும் மருத்துவர் ரமேசு, மகளை சமூகம் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டு விட்டு மனைவியின் உடலோடும் அப்பகுதி மக்களோடும் மதுபானக்கடையை கடையை அகற்ற சாலையில் இரவு வரை போராட்டம் நடத்தினார்.
மதுபானக்கடை அகற்றப்படும் என்ற உறுதிக்கு பின்பே மனைவியின் உடலை அரசு மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
காலை 3 30 மணிக்கு தன் மகளை மருத்துவமனையில் காண கதறலோடு பயணப்பட்டார்.
எந்த ஒரு போராட்டமென்றாலும் கணவரோடு கை கோர்த்த அவரது மனைவி இன்று அவரது உடலையே சமூகத்திற்கான ஆயுதமாக மாற்றினார்.
சமூகத்தின் மீதான அளவு கடந்த உங்கள் அன்பை இந்த சமூகம் மறவாது என்று சொல்லி ஏராளமானோர் கண்ணீர் வணக்கம் செலுத்திவருகின்றனர்.