அதிமுகவில் சேர்ந்தார் ராதாரவி

நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடந்த மார்ச் 25-ம் தேதி அறிவித்தார்.

அதன்பின் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் ராதாரவி.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நடிகர் ராதாரவி இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்தபோது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

Leave a Response