பச்ச குழந்தைய கொல்லுற மாதிரி பயிர அழிக்கிறாங்களே உருப்படுவாங்களா?

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் அவசரகதியில் நடக்கின்றன.

முன்னதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

அதாவது நாகை மற்றும் காரைக்காலில் சுமார் 2,574 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 158 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்கள் பணிகளை காவல்துறை பாதுகாப்புடன் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

வயல் வெளிகளில் ராட்சத குழாய்கள் பதிக்கும் போது, அந்த நிலப் பகுதிகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது….

இவனுங்க தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்கிட்டு தான் வீட்டுக்கு போவானுங்கன்னு நினைக்கிறேன்!!!.
நமக்கும் புத்தி வர மாட்டேங்குது ஓட்டு போட்டபின் உட்கார்ந்து அழுகிறோம்!!
ஓட்டு கேட்கும் போது நானும் விவசாயின்னு பிச்சை எடுப்பானுங்க அதையும் பார்த்து நம்ம முட்டாள்கள் கூட்டம் ஆஹான்னு கை தட்டும், ஓட்டு மெஷின்ல சூது பண்ணி ஜெயிச்சு வந்த பிறகு தலையில் ஏறி அடிப்பானுங்க…..

ஐயோ.. இத விட கொடுமை என்னடா இருக்கு… பச்ச குழந்தைய கொல்லுர மாதிரி தான்டா பயிர அழிக்கிறது..

எவனுக்குடா தேவ உங்க ஹைட்ரோகார்பன். இத்தனை காலமா அது இல்லாமதான் இருந்தோம் ஆனால் சோறு இல்லாம இருந்தது இல்லடா. இப்படி விவசாயின் வைத்துல அடிச்சிங்க உங்க பரம்பரையே உருபுடாது.

இவ்வாறும் இதைவிடக் கடுமையாகவும் சாபமிடுகின்றனர்.

Leave a Response