13 பந்துகளில் 48 ரன்கள் – ஆந்த்ரே ரஸ்ஸல் அதிரடியில் கொல்கத்தா அபார வெற்றி

ஐபிஎல் 12 – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 17 ஆவது லீக் போட்டி ஏப்ரல் 5 இரவு எட்டு மணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கியது பெங்களூர் அணி.

20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 84 (49 பந்து) ரன்கள், டிவில்லியர்ஸ் 63 (32 பந்து) ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ், நிதீஷ் ராணா, சுனில் நரின் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆந்த்ரே ரஸ்செல் ஆடிய அதிரடி ஆட்டத்தினால், 19.1 ஓவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து (206 ரன்கள்) இலக்கை எட்டியது.

இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்செல் 13 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார், இதில் 1 பவுண்ட்ரி மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் கிறிஸ் லின் 43 ரன்கள், நிதீஷ் ராணா 37 ரன்கள், உத்தப்பா 33 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் சைனி மற்றும் நெகி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் பெங்களூரு அணியும் அதன் தலைவர் விராட்கோலியும் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றனர்.

Leave a Response