ஓபிஎஸ் ஸை நம்பி வீணாய்ப்போனேன் – வெளிப்படையாகக் குற்றம் சாட்டும் முன்னாள் எம்.எல்.ஏ

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியைத் சேர்ந்தவர். தற்போது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருக்கிறார்.ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்.

அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மார்ச் 19 அன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அதிமுக தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

நான் ஓபிஎஸை நம்பிப் போனேன் ஆனால் அவர் எனக்கு உதவவில்லை. அதன் காரணமாக நான் என்னுடைய அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 18 அன்று காலியாக இருந்த விளாத்திக்குளம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு தன்க்குக் கிடைத்துவிடும் என்று நம்பியிருக்கிறார்.

ஆனால், கடம்பூர் ராஜூ ஆதரவாளரான சின்னப்பனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த மார்க்கண்டேயன், தனது செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து அவர் இன்று செய்தியாளர்களையும் சந்தித்து தனது அதிருப்திக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

மார்க்கண்டேயன் பேசும்போது, அதிமுக தலைமையில் குளறுபடி இருக்கிறது. இறங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் நல்ல தலைமைப் பண்பு உள்ளவர்களுக்கும் தேர்தலில் சீட் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, கடம்பூர் ராஜூ போன்ற ஆட்கள் கை காட்டும் நபருக்கு சீட் கொடுக்கப்படுகிறது. உட்கட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக வேலை செய்பவர் கடம்பூர் ராஜூ. அவருக்கு அனுபவம் கிடையாது. அவருக்கு மாவட்டச் செயலாளராக இருக்கத் தகுதி இல்லை.

அதிமுக இப்படியே சென்றால், இந்த கப்பல் நீந்தி கரை சேராது. தேர்தலுக்குப் பின்னர், அதிமுக ஒரு தலைமையின் கீழ் வரும் என்று பேசினார்.

Leave a Response