
2019 நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ இன்று அறிவித்தார்.
17 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.
அன்றைய தினமே காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றார். இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிதுநேரத்தில், தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ,தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும்.
வழக்கு நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


