ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் போட்டி – இந்தியாவிலேயே முதன்முறையாக சீமான் அதிரடி

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஆட்சிக் காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.

புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது.

தேர்தல் தேதியை அடுத்த மாதம் (மார்ச்) தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதிகள் விவரங்களை சீமான் வெளியிட்டுள்ளார்.

அதில்…..

எதிர்வரும் 2019 – நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவிருக்கிறது.

அதில் ஆண்களும், பெண்களும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார்கள். வேட்பாளர்களுக்கான தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்நிலையில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்13-02-2018 அன்று வெளியிட்டுள்ளார்.

ஆண் வேட்பாளர்களுக்கான தொகுதிகள்:

மத்திய சென்னை
திருபெரும்புதூர்
அரக்கோணம்
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
சேலம்
நாமக்கல்
திருப்பூர்
கோயம்புத்தூர்
திண்டுக்கல்
தேனி
கரூர்
பெரம்பலூர்
சிதம்பரம் (தனி)
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
கன்னியாகுமரி
புதுச்சேரி
விருதுநகர்

பெண் வேட்பாளர்களுக்கான தொகுதிகள்:

ஆண்டிபட்டி
பெரியகுளம் (தனி)
தென் சென்னை
காஞ்சிபுரம் (தனி)
வேலூர்
தர்மபுரி
ஆரணி
விழுப்புரம் (தனி)
கள்ளக்குறிச்சி
ஈரோடு
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
திருச்சிராப்பள்ளி
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம் (தனி)
சிவகங்கை
மதுரை
இராமநாதபுரம்
திருநெல்வேலி

அதேபோன்று எதிர்வரும் 2019 – சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவிருக்கிறது. வேட்பாளர்களுக்கான தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்நிலையில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (13-02-2018) வெளியிட்டுள்ளார்.

ஆண் வேட்பாளர்களுக்கான தொகுதிகள்:

பெரம்பூர்
ஆம்பூர்
அரவக்குறிச்சி
நிலக்கோட்டை
விளாத்திகுளம்
சாத்தூர்
பாப்பிரெட்டிபட்டி
சோளிங்கர்
திருவாரூர்
ஒட்டப்பிடாரம் (தனி)
ஓசூர்

பெண் வேட்பாளர்களுக்கான தொகுதிகள்:

ஆண்டிபட்டி
பெரியகுளம் (தனி)
தஞ்சாவூர்
அரூர் (தனி)
மானாமதுரை (தனி)
குடியாத்தம் (தனி)
திருப்போரூர்
திருப்பரங்குன்றம்
பரமக்குடி (தனி)
பூந்தமல்லி

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response