ரஜினி ரசிகரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினரா?

நடிகர் ரஜினிகாந்தை பொது மேடைகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோசமாகப் பேசி வருகிறார் என்றும் அதனால் சமூக வலை தளங்களில் சேலத்தைச் சேர்ந்த ரஜினிரசிகர் பழனி என்பவர் சீமான் பற்றி அவதூறாகப் பேசிவந்தாராம். அதைப் பொறுக்க முடியாமல் ரஜினி பழனியை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்….

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் பொழுது தோனி ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு அவசரப்பட்டு நாம் தமிழர் கட்சியினர் தான் காரணம் என்று செய்தி வந்தது. அவரே சீமான் கட்சியினர் என்று முதலில் பேட்டிகொடுத்துவிட்டு பிறகு பதட்டத்தில் சொல்லிவிட்டேன் நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று மீண்டும் பேட்டியளித்தார்.

அப்படித்தான் சேலத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் இன்று தாக்கப்பட்டதும் அதற்குக் காரணம் நாம் தமிழர் கட்சியினர் தான் என்று எவ்வித விசாரணையுமின்றி அவர் கூறுவதை மட்டும் வைத்து செய்தி பரப்பப்படுகிறது. நாம் தமிழர் கட்சி என்றைக்குமே வன்முறைக்கு எதிரான கட்சி. தேர்தல் நேரத்தில் கட்சிக்குக் களங்கம் விளைவித்து மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நோக்கோடு இப்படியான செயல்களும் சதிகளும் அரங்கேற்றப்படுகிறது என்று சந்தேகிக்கிறோம்.

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்து பல மாற்றுக்கட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் அவர்களிடத்தில் கருத்தியல் ரீதியான விவாதங்களை மட்டுமே நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டு வருகிறார்கள். எக்காலத்திலும் அதைக்கடந்த வன்மத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொள்ளமாட்டார்கள் என்று இந்த 10 வருட நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

ஆகவே இதுபோன்ற வன்முறை செயலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

— தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response