இந்திய கிரிக்கெட் வீரர் பற்றிப் பரவிய அநியாய வதந்தி

இந்திய மட்டைப்பந்தாட்ட அணி வீரர்களில் ஒருவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வீரருமான சுரேஷ் ரெய்னா, மகிழுந்து விபத்தில் இறந்துவிட்டதாக வந்திகள் பரவின.

அது தொடர்பாக யூடியூப்பில் பல்வேறு காணொலிகள் உருவாக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டதாக போலிச் செய்திகள் வெளியாகின.

இந்த விஷயம் தெரிந்ததும் அதுபற்றி சுரேஷ்ரெய்னா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது….

கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான, போலியான செய்தி வெளியாகி வருகிறது.

நான் கார் விபத்தில் இறந்துவிட்டதுபோன்ற வீடியோக்கள் வலம் வருகின்றன.

இந்த வீடியோக்களால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற செய்திகளைத் தவிர்த்துவிடுங்கள்.

இறைவனின் கருணையால் நான் நலமான இருக்கிறேன். என்னைப் பற்றி தவறாகச் செய்தி வெளியிட்ட யுடியூப் சேனல் குறித்து முறைப்படி புகார் செய்யப்பட்டு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Leave a Response