கூட்டணியில் இழுபறி – மோடியின் தமிழக வருகை இரத்து

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லையாம். தினகரனும் அதிமுகவில் இணைந்தால்தான் அது உண்மையான அதிமுகவாக இருக்கும் என்றும் பாஜக நினைப்பதே காரணம் என்றும் அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அப்பேச்சுகள் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் முடிந்து சுமுக நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை, அடுத்து பிப்ரவரி 19 ஆம் தேதி பிரதமர் கன்னியாகுமரி வரும்போது கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போதும் முடியாது போல் தோன்றுகிறது. ஏனெனில் பிரதமரின் கன்னியாகுமரிப் பயணம் தேதி அறிவிக்கப்படாமல் பிரதமரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தபின் மோடியின் வருகை பற்றி அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response