தமிழர்களை இழிவாகப் பேசிய மதிமுக பெண் – கொந்தளிக்கும் தமிழுணர்வாளர்கள்

கோவையில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சி பேரவையின், கோவை மண்டல மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

அந்த மாநாட்டில் பேசிய மதிமுகவைச் சேர்ந்த தனமணி வெங்கட் என்ற பெண் உறுப்பினர், தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும், தமிழர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து வந்ததாகவும் தமிழர்கள் குறித்து இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

தமிழர்களைத் தெலுங்கர்கள்தான் (கம்மவார்நாயுடு) ஆளவேண்டும்

கம்மவார் நாயுடு சாதியில் பிறந்தவர்கள் அரசியல் வேண்டாமென ஒதுங்கவேண்டாம்.

தமிழகத்தின் அதிகாரம் நம் கைகளில் இருக்கவேண்டும்,எந்தக் கட்சியில் இருந்தாலும் நம் சாதி மக்களுக்காக வேலை செய்யுங்கள், கட்சியில் பதவி வாங்கிக்கொடுங்கள்.

தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள், தமிழர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர்கள்.

இவை உட்பட இன்னும் நிறைய சர்ச்சைக்குரிய விசயங்களைப் பேசியிருக்கிறார்.

தமிழகத்திற்குள்ளேயே தமிழர்களை வந்தேறிகள் என மதிமுகவைச் சேர்ந்தவர் பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சின் காணொலி வலைதளங்களில் பரவியதால் தமிழுணர்வாளர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

இதற்கு வைகோ பதில் சொல்வாரா? என்கிற கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response