தமிழக வீரர் உட்பட இந்திய அணியில் 3 மாற்றங்கள் – தொடரை வெல்லுமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய மட்டைப்பந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்குப் பின்னர், ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

மழையால் டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியின் மூலம் தமிழக வீரர் விஜய் சங்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். இந்திய அணி 3 மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

முகமது சிராஜ், அம்பாதி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் யுஷ்வேந்திர சஹால் ஆகியோர் களமிறங்கிறார்கள்.

Leave a Response