ரஜினி தொலைக்காட்சி கட்சிக்காகவா? தொழிலுக்காகவா?

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். முதல்கட்டமாக ரசிகர் மன்றம் தற்போது ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு அதில் அதிகஅளவில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி தனக்கு ஆதரவாக தொலைக்காட்சி ஒன்று இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிகிறது.

இதற்காக சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி மற்றும் தலைவர் டிவி ஆகிய பெயர்களைப் பதிவு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது.

ரஜினி மன்றப் பொறுப்பாளர் சுதாகர் பெயரில் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பத்தில் ரஜினியின் பெயர், போட்டோ போன்றவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சி தொடங்குமுன்பு தொலைக்காட்சி தொடங்குவது கட்சிக்குப் பலம் சேர்க்கவா? அல்லது இதைக்காரணமாகச் சொல்லி ஊடக வணிகத்தில் ஈடுபடவா? என்கிற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலாவருகின்றன.

Leave a Response