சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – நடிகர் சிவகுமார் கருத்து

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது பாகுபாடின்றி எல்லா நிலையிலுள்ளப் பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

இதற்கு பாஜக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ச்சியாகப் போராட்டங்களும் நடக்கின்றன.

காவல்துறை உதவியுடன் இன்று இரண்டு பெண்கள் கோயிலுக்குச் சென்றதால் கேரளாவில் பதட்டம் அதிகரித்துள்ளது.

சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தி்ல் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை நீடித்து பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு உத்தரவிட்டுள்ளார். பம்மை, நிலக்கல், சன்னிதானம், இலவங்கல் ஆகிய இடங்களுக்கு 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள கருத்து….

நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை.

விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர்.

பெண்களுடைய உதிரப் போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை . ஆண்கள் உடன் அழைத்துச் செல்வதில்லை.

தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு.

விரத காலங்களைத் தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்

இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார்.

Leave a Response