யாஷிகா ரசிகர்களுக்கு பிக்பாஸ் தரும் அதிர்ச்சி

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி 99-வது நாளைக் கடந்து செல்கிறது. இந்த முறை கூடுதலாக 6 நாட்களைச் சேர்த்து 106 நாட்களாக அறிவித்துள்ளனர். அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை ‘பிக் பாஸ் 2’ முடிவடைகிறது.

அதனால், இம்முறை பிக்பாஸ் வெற்றியாளர் யார்? என்கிற கேள்வி அதன் பார்வையாளர்களுக்கு இருக்கிறது.

இப்போது, யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா, பாலாஜி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில், பாலாஜி வெளியேற்றப்படுவதாகத் தெரிகிறது. குறைந்த அளவு வாக்குகள் வாங்கியதில் பாலாஜி உள்ளார்.

இன்னொரு முக்கியப் போட்டியாளராகக் கருதப்பட்ட யாஷிகாவும் வெளியேற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இதை மெய்ப்பிக்கும் வகையில் முந்தைய ‘பிக் பாஸ்’ போட்டியாளர் காஜல் “என்ன பிக் பாஸ் வீட்டில் பாலாஜி, யாஷிகா இல்லையா? அப்படியானால் ஐஸ்வர்யாவுக்கு கை ஒடிந்தது போலிருக்குமே, அப்படியானால் ஐஸ்வர்யா வெல்வது கடினமாச்சே. என்ன ஐடியா பண்றாங்க” என்று பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார்.

இதனால் யாஷிகா ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response