மக்கள் கவி கபிலன் – பட்டம் வழங்கினார் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்வை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாண்டு அதையொட்டி, செப்டம்பர் 19 அன்று சென்னை பெரியார் திடலில் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

அக்கவியரங்கில்,கவிஞர்கள் இளையகம்பன்,தமிழமுதன், கவிமுகில்,இசாக், அருண்பாரதி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

அக்கவியரங்கில் சிறப்புக்கவிதை வாசித்த கவிஞர் கபிலனுக்கு, மக்கள் கவி என்கிற பட்டத்தை தொல்.திருமாவளவன் வழங்கினார்.

இதுதொடர்பாக, தொல்.திருமாவளவன்,

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அடியொற்றி..

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்குக் கிடைக்கணும் – அவன்
அனுபவிச்ச மிச்சம்தான்
ஆண்டவணுக்கே படைக்கணும்

உள்ளிட்ட ஏராளமான புரட்சிகரமான கருத்துகளைப் பாடல்கள் மூலம் பரப்பிவரும் பாடலாசிரியர் கபிலன் அவர்களை மக்கள்கவி என்று பாராட்டி வாழ்த்துகிறோம்

என்று கைப்பட எழுதிக்கொடுத்திருக்கிறார்.

Leave a Response