இறுதிப்போட்டியில் இடம்பெறப்போவது யார்? பிக்பாஸ் எதிர்பார்ப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இடையில், விஜயலட்சுமியும் புதிய போட்டியாளராக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, மும்தாஜ், ஷாரிக் ஹாசன் ஆகியோர் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி ஆகிய 6 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

இவர்களில், விஜயலட்சுமிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. காரணம், போட்டியின் இடையில் சேர்ந்தவர் விஜயலட்சுமி. அவர் அதிக நாட்கள் இல்லாததால், இறுதிப்போட்டிக்கு அனுப்பப்பட மாட்டார் என்று தெரிகிறது.

எனவே, ஜனனி, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ரித்விகா ஆகிய 5 பேரில், 4 பேர் இறுதிப்போட்டிக்குச் செல்ல, ஒருவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்.

ஜனனி ஏற்கெனவே நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வான நிலையில், மற்ற மூன்று பேர் யாராக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Leave a Response