தமிழரின் பெருமையை கனடாவில் பறைசாற்றும் தமிழ் காவல்துறை அதிகாரி.

எங்கும் தமிழன் எங்கேயும் தமிழன்.. என பெருமை கொள்ளும் காலம் இது. தமிழர்கள் இன்று கனடா போன்ற பல்வேறு நாடுகளிலும் ஆளுமை கொண்ட தமிழர்களாக காலூன்றி தமிழினத்தின் பெருமையை உயர்த்தி வருகின்றமை மகிழ்ச்சியே.

அந்த வகையில் தமிழ் மக்களை பெருமை படுத்துகின்றார் திரு. நிசாந்தன் துரையப்பா அவர்கள். இவர் கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழ் மக்களின் வரிசையில் பொலிஸ் அத்தியட்சராக பதவி வகித்து தமிழ் மக்களின் ஆற்றலையும் ஆளுமையையும் அடையாளப்படுதியுள்ளார். .அத்தோடு
இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.

ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து பின் தனது திறமைகளால் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி பதவிகளிற்குத் பதவி உயர்த்தப்பட்ட நிசாந்தன் துரையப்பா தற்போது பொலிஸ் அத்தியட்சராக பணிபுரிந்து வருவதோடு, அப் பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார் என்ற செய்திகள் ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமையை காணலாம்.

ஹால்ரன் பிரதேசத்திலுள்ள பல்லின சமூகத்தினரிடையே மிகவும் பிரபல்யமான ஒரு அதிகாரியாக இருக்கும் திரு. நிசாந்தன் துரையப்பா புதிய குடிவரவாளர்களிற்கான பல திட்டங்களை அப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களாகப் பெருமை கொள்வோம்.

வந்தேறு குடி என்றும் அகதி என்றும் அங்கீகாரம் இன்றி உலகெங்கும் ஏதிலிகளாக எம் தமிழர்கள் கண்ணீரோடு கடல் கடந்து வாழும் சோகங்களின் மத்தியில் கடல் கடந்து சென்றாலும் தமிழனின் பெருமை தரமிழந்து போகாமல் உலகோர் புகழும் வகையில் ஆளுமை கொண்டு ஆற்றல்களை வெளிப்படுத்துவதை தமிழினமாக பெருமை கொள்வோம். வாய்ப்பளித்த கனடிய மண்ணுக்கும் நன்றிகள்.

கனடாவின் பல பிரதேசங்களிலும் பணிபுரியும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனடிய மனிதவுரிமை மையம் (CHRV) ஈழத்தமிழர்கள், தென்னாபிரிக்கத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என கனடியப் பொலிஸ் சேவையில் இருக்கும் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றது.- செந்தமிழினி பிரபாகரன்.

Leave a Response