
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் மே 6 அன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.கல்வியாளர்களான ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்கு எதற்கு நன்றி?
ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில், இயக்குனர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் படிக்க இன்ஜினியரிங் கல்லூரியில் மூவரும் இணைந்து தலா 30 இடங்களை இலவசமாக அளித்துள்ளனர்.
கலை அறிவியல் கல்லூரியில் படிக்க ஜெகத்ரட்சகன் 20 இடங்கள், ஏ.சி.சண்முகம் 20 இடங்கள், ஐசரிகணேசன் 20 இடங்கள் என்று மொத்தம் அறுபது இடங்கள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த விழா.
அதுமட்டுமின்றி விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர்,எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார்,பாலா, , சித்ராலட்சுமணன், ராமதாஸ், ரமேஷ்கண்ணா, ரவிமரியா, விஜய், தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு, கே.ஆர், பொன்வண்ணன்,ஆர்.கண்ணன் மற்றும் ஏராளமான இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
