எதிர்க்கட்சிகளைக் கண்காணிக்கும் காவல்துறை, சமுகவிரோதிகளைக் கண்காணிப்பதில்லை- கொ. ஜ. கட்சி சாடல்.

வெளிமாநிலத்தவர் ஊடுருவல் தொடர்பாக, கொங்குநாடு ஜனநாயக கட்சி(KJK) சார்பில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு பலமுறை கடிதம் அனுப்பியும்,தமிழக காவல்துறை, தீவிரவாதிகள் மற்றும் சமூகவிரோதிகளைக் கண்காணிப்பதிலும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை வெளியேற்ற வேண்டும் என்ற நடவடிக்கையிலும் மெத்தனம் காட்டிவருகிறது.
இந்நிலை நீடித்தால் காவல்துறைக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி(KJK) அறிவித்திருக்கிறது.
அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கை…
கோவை கருமத்தம்பட்டியில் தமிழகம்,கேரளம்,ஆந்திரம் மாநிலங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய பெண் உட்பட மாவோயிஸ்ட்களை ஆந்திரமாநில சிறப்பு புலனாய்வு பிரிவின் தகவலையடுத்து,தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர்.

24.11.2014 அன்று மேகாலாயவைச் சார்ந்த “ஆச்சிக் நேஷனல் கோ ஆப்ரேடிவ் ஆர்மி (எ.என்.சி.எ) நக்சலைட்டுகள் திருப்பூரில் தங்கியிருந்தது மேகாலயா போலீசார் சொல்லிய பின்பே திருப்பூர் போலீசாருக்கு தெரியவந்தது.

இதேபோல ஒரிசா,பீகார்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களும், பங்களாதேஷ் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் கொங்குமண்டலத்தில் குறிப்பாக திருப்பூர்,கோவை மாவட்டத்தில் தொடர்ந்துவந்து தங்கிய வண்ணம் உள்ளனர்.

இவர்களைப்பற்றிய குற்றப்பின்னணிகளை ஆராயவும்,இவர்களை கண்காணிக்கவும் தமிழக காவல்துறை போதிய அக்கறை காட்டுவதில்லை.ஆளுங்கட்சியின் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் தமிழக உளவுத்துறை, சமூகவிரோதிகளை கண்காணிக்க தவறிவிடுகிறது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் ஆதாய கொலைகளுக்கும்,வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களுக்கும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தின் முன்னாள் குற்றவாளிகளே முக்கிய காரணமாக உள்ளனர்.ஆனால் இவர்களுடைய குற்றப்பின்னணியை காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவரை கொங்குமண்டலத்தில் பலமுக்கிய தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டது, வெளிமாநில போலீசாரின் தகவலையொட்டியே தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கேரளா போலீசாரால் கண்டுபிடித்துக்கொடுத்தால் ரூ.5 இலட்சம் பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை கருமத்தம்பட்டியில் டீக்கடையில் சாதாரணமாக டீ அருந்துவது போலீசாரின் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இந்நிலை நீடித்தால் கொங்குநாடு ஜனநாயக கட்சி(KJK) காவல்துறைக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தும்.

Leave a Response