ரஜினி இல்லையென்றால் காலா வந்திருக்குமா? – அதிரடி கேள்வி

வழக்கறிஞரும் திராவிடர் கழக பிரமுகருமான அருள்மொழி காலா படம் பற்றிக் கூறியிருப்பதாவது….

காலா..படம் பார்த்தேன்

தந்தை பெரியார் இருக்கிறார்.
தோழர் லெனின் இருக்கிறார்
அண்ணல் அம்பேத்கர் இருக்கிறார்.
புத்தர் இருக்கிறார்
நிலத்தின் மீது உரிமை கோரும் ஏழைகளின் போராட்டம் வர்ணமும் வர்க்கமும் இணைந்து ஒடுக்கும் அரசியலைப் பேசுகிறது.
நீண்ட காலமாக நாம் பெண்ணிய மேடைகளில் கேட்கும் கேள்விகளை மிக யதார்த்தமாக கதையில் வரும் பெண்கள் கேட்கிறார்கள்.

உச்சகட்ட காட்சியில் சேரியை கொளுத்தி மக்களை கொன்று குவிக்கும் போது வில்லன் வீட்டில் இராமகதை கலாட்சேபம் நடக்கிறது..
ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குகிறார்கள்.
சேரியை காலிசெய்து கார்ப்பொரேட் இடமாக மாற்ற மனு கம்பெனி வருகிறது.
மனு கம்பெனியாரின் ஏற்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே இந்து முசுலீம் சண்டை உருவாக்கப் படுகிறது.
மக்களை காக்கும் மண்ணுரிமைக்காரன் ராவணன் என்று அழைக்கப் படுகிறான். படத்தில் கதாநாயகன் வீட்டு மேசைமீது
இராவணகாவியம் இருக்கிறது.

தனது வணிகசினிமா வெற்றியை பணயம் வைத்து இத்தனை பிரச்சாரத்தை ஒரே படத்தில் நிகழ்த்திய இயக்குனர் பா.இரஞ்சித் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

ரஜினிகாந்த்தை கதாநாயகனாக வைத்தது பற்றி …விமர்சனம் எழுவது இயற்கையே.

ஆனால் வேறு கதாநாயகனை வைத்து எடுத்து இருந்தால் நில உரிமைக்கு முன்பாக படத்தை வெளியாடும் உரிமைக்காக சென்சாரோடு ஒரு யுத்தம் நடத்த வேண்டி இருந்திருக்கும்.

காலா ஓடும் அரங்கம் நிறைந்துதான்
இருந்தது. படத்தின் வருமானம் ரஜினி குடும்பத்திற்குப் போகும். காவி எதிர்ப்புப் பிரச்சாரம் மக்களிடம் சேரும்.

Leave a Response