
மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய அளவில் செயல்படும் ஷக்ஷம் அமைப்பு தமிழ்நாட்டில் திருப்பூரில் ஏ.டி,ஐ.பி., திட்டத்தின் கீழ் செயற்கை கை கால்கள் உற்பத்தி நிறுவனமான ஆலிம்கோ உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 18
ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முகாம்களை நடத்தியது.
ஐந்து இடங்களில் நடந்த இந்த முகாம்களில் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டநிலையில் அவர்களில் 2513 பேர் செயற்கை கை, கால்கள் மற்றும் கைத்தடி, காது கேளாதவர்களுக்கான கருவிகள் ஆகிய உபகரணங்களைப் பெற பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களுக்கு செயற்கை கை மற்றும் கால்களை வழங்கும் நோக்கில் அதற்கான அளவுகளையும் ஆலிம்கோ நிறுவனம் குறித்துச் சென்றது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த உதவி உபகரணங்களையும் கருவிகளையும் வழங்கவும் அந்த நிறுவனம் உறுதியளித்தது.
ஆனால் 90 நாட்கள் கழிந்த நிலையில் இந்த உதவி உபகரணங்களை வழங்குவது பற்றி மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த அறிவுறுத்தலையும் பெறவில்லை என்று அலிம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த விஷயத்தில் அமைச்சர் கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகள் உரிய உதவி உபகரணங்கள் மற்றும் கருவிகளை உடனடியாக எந்தவிதத் தாமதமும் இன்றி பெற்றிட ஆவண செய்யவேண்டுமாறு
கடந்த மார்ச் மாதம் மத்திய சமூக நீதி மற்றும்
அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லாட்டை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் எடுத்த உடனடி நடவடிக்கையால் 14.06.2018 திருப்பூரில் அனைத்து பயனாளிகளுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, இவ்விவகாரம் தொடர்பாக தொடர் முயற்சி செய்த காரணத்தால் இது சாத்தியமாகியிருக்கிறது என்று பயனாளிகள் தெரிவித்தனர்.


