
காலா படத்தின் விளம்பரத்துக்காக ஐதராபத் போய்விட்டு திரும்பிய ரஜினிகாந்த்,
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘கர்நாடாகாவில் காலா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பார்க்கவிரும்புகிறார்கள். காலா படத்தை வெளியிட கர்நாடக அரசின் முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதனைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
அரசியல் வேறு. சினிமா வேறு. என் படத்துக்கு தற்போது எதிர்ப்பு குறைவாக இருப்பதாகவே உணருகிறேன். படத்தில் நல்ல அம்சங்கள் இருந்தால்தான் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்.
எஸ்.வி.சேகரை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பது தொடர்பாகக் கருத்துகூற விரும்பவில்லை.
நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்கு உரியது. இதனைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் என்று தெரிவித்தார்.
எஸ்.வி.சேகர் விவகாரத்தில் ரஜினி கருத்து சொல்ல மறுப்பது ஏன்? என்கிற கேள்வி பலமாக எழுகிறது.


