இதற்கெல்லாம் கைது செய்து சிறையிலடைப்பார்களா? – நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சி

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு சேலம் முதல் சென்னை வரை இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச்சாலையில் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவில் அமைக்க உள்ளதாகவும் அதன் மொத்த நீளம் 274 கிலோ மீட்டர் நீளம் எனவும் பயண நேரம் மூன்று மணி நேரம் எனவும் 3 மணி நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் அடையலாம். இத்திட்டம் 22 மாதத்தில் முடிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அறிவிப்பு வந்த சூட்டோடு சூடாக தனியார் நிறுவனம் ஒன்று சேலம் முதல் சென்னை வரை 272 கிலோ மீட்டர் நீளமும் சுமார் 1000 அடி அகலத்தில் 22 ஆயிரம் ஏக்கர் மலைகளையும் காடுகளையும் விளை நிலங்களையும் அளந்து கல்வெட்டு வருகின்றனர் விவசாயிகள் விளை நிலங்களும் வீடுகளும் கிணறுகளும் அவ்விடத்தில் சிக்குகின்றன.

மேலும் இச்சாலை சுமார் 230 கிலோ மீட்டர் நீளம் அடர் வனங்கள் வழியாக ஆயிரம் அடி அகலத்திற்கு சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலமும் விவசாய நிலமும் சுமார் 4,000 ஏக்கர் அழிக்கப்படும் 8 வழி சாலை அமைந்துள்ளதாக இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறோம் இத்திட்டமானது மக்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த 8 வழி சாலை திட்டத்தை மக்களிடம் பரிசீலனை செய்து திட்டத்தை கைவிடுமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப் போன நாம் தமிழர் கட்சியினரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

காடு, மலை, வேளாண் நிலங்களை அழித்து சேலம்-சென்னை இடையே அமையவிருக்கும் புதிய 8 வழி (பசுமை?) சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 30 பேரை வழியிலேயே தடுத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

அனுமதி இல்லாமல் பேரணி சென்றதாகச் சொல்லி கைது நடவடிக்கை நடந்திருப்பதாகத் தெரிகிறது.

கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாள் காவலில் வைத்திருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்போனால் சிறையா? என்று அக்கட்சியினர் கொதிக்கிறார்கள்.

Leave a Response