இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இவ்வளவு வேகமாக செயல்படுவார்களா?

இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டில் காயம் பட்டவர்களைப் பார்க்கப் போனார் ஓ.பன்னீர்செல்வம்.

நேற்று போன அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்குக் கிடைத்த மரியாதைகளைக் கண்டு பயந்த ஓபிஎஸ் குழு, மருத்துவமனைக்குள்ளே ஊடகங்களுக்கு அனுமதி இல்லையென்று வாசலிலேயே நிறுத்திவிட்டார்கள்.

இதைக் குறிப்பிட்டு அதிமுகவின் இணையப் பிரிவில். இயங்கும்
ஹரிபிரபாகரன் என்பவர்,

துணை முதல்வர் மருத்துவமனைக்கு விஜயம் செய்யும்போது, உள்ளே படம்பிடிக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கெட்டிற்காக குலைக்கும் தெரு நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்குப் பதிலாக, வாசலிலேயே கட்டிப்போடப்படும்.
— ஹரி பிரபாகரன், அ.இ.அ.தி.மு.க.

என்று ட்வீட் போட்டிருந்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து,

“கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி. ஹரிபிரபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்”

என்று ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

ஒரு குற்றம் நிகழ்ந்த ஓரிரு மணி நேரத்துக்குள்ளாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு உள்ளே பல விசயங்கள் இருக்கின்றன. ஆனாலும் வெளித்தோற்றத்துக்கு விரைவான நடவடிக்கை என்பதால், இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இவ்வளவு விரைவாகச் செயல்படுவார்களா? என எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

Leave a Response