மூத்த விடுதலைப்புலி தலைவரின் மகள் எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்

விடுதலைப்்புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் புகைப்படம் வெளியானது.சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர் இன்று வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

இந்நிலையில் க.வே.பாலகுமாரன் மகள் தன் தந்தைக்கு எழுதியுள்ள நெஞ்சை உருக்கும் கடிதம் வெளியாகியுள்ளது.

அக்கடிதத்தில் …..

நான் எப்போதும் உங்களுடன் இருக்கவே விரும்பியிருக்கிறேன் அப்பா. 2009 முதல் நீங்கள் இன்றி, ரணமான மனதுடன் வாழ்ந்து வருகிறோம்.

நீங்கள் மிக முக்கியமான தமிழ்த் தலைவர்களில் ஒருவர் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.

நீங்கள் மிகச் சிறந்த தந்தை என்று நான் உறுதியாக கூறுகிறேன். ஒருவர் எத்தனை புகழ் பெற்றவராக இருந்த போதும் எளிமையான வாழ்க்கை வாழ முடியும் என்பதை எங்களுக்குக் தாங்கள் வாழ்ந்து காட்டியதன் மூலம் கற்றுக் கொடுத்தீர்கள்.

நான் எப்போதும் சுதந்திரமானவளாக துணிச்சல் மிக்க உறுதியான பெண்ணாக எதையும் எதிர்கொள்பவளாக இருக்க வேண்டும் என்றே நீங்கள் வ ிரும்பியிருக்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் காணாமல் போன பிறகான மன வேதனையையும் மன உளைச்சலையும் என்னால் எதிர்கொள்ள முடிய வில்லை.

எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத துணிவை தரும் எங்களின் பலம் நீங்கள்தான். உங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொற்களால் விவரிக்க இயலாத அளவுக்கு நீங்கள் இல்லாதது எங்களை பாதிக்கிறது. என்றாவது ஒரு நாள் நீங்கள் எங்கள் முன் வந்து எங்கள் கண்களை ஆனந்தக் கண்ணீரால் நிறைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

தனது தந்தையை மகனை மகளை உடன் பிறந்தவர்களை பிரிந்த ஒவ்வொரு குடும்பமும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாங்கள் விரும்பி வேண்டுகிறோம்.

என்றும் அன்பு மகள்

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Leave a Response