மே 4 ஆம் தேதி வெளியான இருட்டறையில் முரட்டுக் குத்து என்கிற திரைப்படம் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் படமாக்கப் பட்டிருக்கிறதாம். இதனால் அப்படத்தை இயக்கியவர், தயாரித்தவர், நடித்தவர்கள் ஆகிய எல்லோருக்கும் கடும் கண்டனங்கள் வருகின்றன.
அவற்றில் ஒன்று……
நாட்டில் நிறைய சிக்கல்கள் நிலவுவதால் நாம் கிருமிகளை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.
விட்டால் கிருமிகள் பல்கிப் பெருகி
உயிருக்கே பேராபத்தாக முடியும்.
ஓர் இனத்தின் உயிராக நிலைப்பது மொழியும் பண்பாடும் தான்.
அவ்வுயிர் நிலையை சிதைக்கும் கேடுகளை நெருப்பிலிட்டுப் பொசுக்கி தீய்த்து தடம் தெரியாமல் அப்புறப்படுத்தவேண்டும்.
தெரியாமல் தவறு செய்தவர்களையே மன்னிக்கமுடியும்.
அறிவித்துவிட்டு செய்கிற அசிங்கங்களை விட்டு விலகி கடந்துசெல்லக்கூடாது.
மத்திய அரசுக்கு இணையாக நம் மண்ணையும் மக்களையும் இழிவுப்படுத்தியிருக்கிறது இந்த படக்குழுவை சேர்ந்த இழிபிறப்புகள்.
பெரும்பான்மை எங்களை ஏற்றுக்கொண்டு ரசிக்கிறது என்கிற திமிரோடு தமிழ்நாட்டின் அடிப்படை மாண்பையே உலக அரங்கில் கேலிக்குள்ளாக்கியிருக்கிறான் இந்த ஈனன்.
மானுட விந்தின் மூலம் கருவாகாமல் மனிதக்கழிவிலிருந்து உருப்பெற்றிருக்கும் இவன் போன்றாரால் தமிழ்மண்ணையும் தமிழ்த் திரைத்துறையையும் நேசிக்கும் பலர் வெட்கி நிற்கிறோம்.
இவன் காட்டியிருக்கும் படத்தில் இரையும் சொற்களை இவனது வீட்டுக்குள்ளும் படத்தை தயாரித்தவனது வீட்டுக்குள்ளும் அமர்ந்து சத்தமாக பேசவேண்டும்.
இருவரது வீட்டிலும்
தாய் தங்கை மகள் இருந்தால் அவர்கள் எல்லோருமே இவனது பார்வைக்கு துவாரங்களாகத் தான் தெரிகிறார்களா என்பதை அறிந்து வர வேண்டும்.
சாலை நிரப்பியோடும் சாக்கடையை மூக்கைப் பிடித்துக்கொண்டு செங்கல் வரிசையில் கால்வைத்து லாவகமாகக் கடந்துசெல்லப் பழகிவிட்டதுபோல அனைத்தையும் கடந்து செல்வோமேயானால்
இம் மண்ணில் தமிழினம் எஞ்சாது.
கலப்பினமே மிஞ்சும்.
இப்படிப்பட்ட சந்தோஷ்கள்
சந்தோஷம் இழந்தால்
மழை பொழியும்.
மண் குளிரும்.
– பாலமுரளிவர்மன்