ஐபிஎல் – சிறப்பான பந்துவீச்சில் மும்பையை முடக்கியது சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல். -20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதிக்கொண்டன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோகித் சா்மா முதலில் எதிரணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான தவானும் கேப்டன் வில்லியம்சனும் களம் இறங்கினர்.

அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியவில்லை. 18.4 ஓவர்கள் விளையாடிய ஐதராபாத் அணி 118 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

பின்னர் 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் ஆரம்பம் முதலே ஐதராபாத் அணியினர் சிறப்பான முறையில் செயல்பட்டதால், ரன்கள் சேர்க்க தவறிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் தங்களது விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தனர்.

18.5 ஓவர்களிலேயே 87 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மிகவும் அற்புதமாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் கடைசி 4 ஒவர்களில் வெறும் 10 ஓட்டங்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அந்த அணியில் சிதார்த் கவுல் 3 விக்கெட்டுகளையும், பாஷில் தம்பீ மற்றும் ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 5-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response