காவல்துறையால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இயக்குநர்

ஐபிஎல் போட்டிக்கெதிராக ஏப்ரல் 10 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மக்கள்திரள் போராட்டத்தின்போது, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் அணிதிரண்ட இயக்குநர்களில் ஒருவரான மு.களஞ்சியம், காவல்துறையினரால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை நேரில் சந்தித்த விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் வன்னைஅரசு கூறியிருப்பதாவது….

இப்படி அடிப்பார்களா? இப்படி அடிக்க முடியுமா?
என்று பதறுகிற அளவுக்கு போலீசு அடித்து தூக்கி வீசி எறிந்திருக்கிறது.

தாக்குதலுக்குள்ளான இயக்குநர் தோழர் களஞ்சியம்,
கரூர் ரமேஷ் ஆகிய தோழர்களை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சந்தித்தோம்.

தோழர் களஞ்சியம் இயக்குநர் மட்டுமல்ல. தமிழர் நலப்பேரியக்கத்தை நடத்திவரும் தலைவர். தமிழர் உரிமைகளுக்காக களமாடி வருபவர்.அப்படித்தான் நேற்றும் காவிரி நீர் உரிமைக்கான சென்னை போராட்டத்தில் தோழர்களோடு அண்ணா சாலையில்
முழங்கி வந்தார்.

அரசுக்கு எதிரான அந்த போராட்டத்தில் போலீசார்
திட்டமிட்டு தாக்குதலை தொடுத்துள்ளனர்.

கடும் வலியுடனும் காயத்துடனும் இருந்த தோழர்களை
விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் அய்யா தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சந்தித்து
ஆறுதல் கூறி வந்தோம்.

தோழர் ரமேசு மிகுந்த சீரியசாக உள்ளார். மருத்துவர்கள் காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கறார்கள்.

எதுவானாலும் எடப்பாடி அரசே பொறுப்பேற்க வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response