நாம்தமிழர்கட்சியினருக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து

சென்னையில் ஏப்ரல் 10 அன்று நடந்த ஐபிஎல் போட்டிக்கெதிராக இயக்குநர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ் உள்ளிட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்தனர்.

மேலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர் அனைவரையும் போலீசார் கலைந்து செல்லும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் காவல்துறையினரைத் தாக்கினர்.

அவர்கள், நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்

என்று ரஜினிகாந்த் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

Leave a Response