3000 ஆண்டு வேளாண்மை சமூகம் நாங்கள், ஏமாறமாட்டோம் – வைரமுத்து உறுதி

சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தப் போராட்டம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிரானதல்ல. போலீஸாருக்கு எதிரான போராட்டமும் அல்ல. காவிரி நதி உரிமைக்கான போராட்டம். தமிழ் மண்ணுக்கான போராட்டம். நாங்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்துள்ளோம். தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது.

தமிழர்களின் ஆதி பண்பாடு விவசாயம். அந்த விவசாயம் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நீண்டகால அவகாசம் தேவையில்லை. எங்கள் தஞ்சை மண்ணை பாலைவனமாக்க,. காவிரிப்படுகையை எண்ணெய் படுகையாக்க யாராவது சூழ்ச்சி செய்தால், 3000 ஆண்டு வேளாண்மைச் சமூகமான நாங்கள் அதை விட மாட்டோம். நாங்கள் கடைசி வரை போராடுவோம். தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

Leave a Response