சென்னை ஐபிஎல் – இந்திய அரசு தோல்வி நாம்தமிழர் வெற்றி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்துவதா என எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் ஏப்ரல் 10 மாலை பல்வேறு அமைப்பினர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியே போர்க்களமானது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

மறியலில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.

ஐந்து அடுக்கு பாதுகாப்பு, மத்திய படை பாதுகாப்பு என்று கடும் பாதுகாப்புகளை மீறி மைதானத்துக்குள் புலிக்கொடியுடன் நாம்தமிழர்கட்சியினர் நுழைந்துவிட்டனர்.

போட்டியின்போது மைதானத்தில் புலிக்கொடியைப் பறக்கவிட்டு முழக்கங்கள் எழுப்பியதோடு, மைதானத்துக்குள் காலணிகளையும் வீசி எதிர்ப்பைப் பதிவு செய்தனர் நாம்தமிழர்கட்சியினர்.

கால்ணி மற்றும் சட்டைகளை வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் 3 நிமிடம் போட்டி தடைபட்டது.

இந்திய தமிழக அரசுகளின் படைகளைத் தாண்டி மைதானத்துக்குள் கொடி பறக்கவிட்டதோடு, காலணி வீசி உலகம் முழுக்க காவிரிச் சிக்கலைப் பற்றி அறியத்தந்த நாம்தமிழர்கட்சியினருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Leave a Response