கர்நாடகாவை திருப்திப் படுத்தவே இப்படிப் பேசுகிறார் – ரஜினிக்கு கடும் எதிர்ப்புகள்

சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏப்ரல் 10 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

காவலர்களின் தடையை மீறிச் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த், சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து எனவும் அவர் கூறியிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்து கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இதுபற்றி இயக்குநர் அமீர் கூறுகையில்,

ரஜினியின் இந்த கருத்து அரசியல் புரியாமையை காட்டுகிறது. ‘ஒரே ஒரு வீடியோவை பார்த்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். உண்மையில் நடந்தது என்ன? போராட்டம் எப்படி தொடங்கப்பட்டது? யார் முதலில் கம்பை சுழற்றியது என்பதை தெரியாமல் அவர் பார்த்த காட்சியை வைத்து உடனே பதிவிட்டுவிட்டார். இது வருத்தத்திற்கு உரியது என்றார் அமீர்.

தமிழர்களின் உரிமை போராட்டத்தை ரஜினி திசை திருப்பலாமா..? போலீஸ் நடத்திய தடியடியை ஏன் கண்டிக்க வில்லை? பாஜகவின் ஊதுகுழலாக போராட்டத்தை திசை திருப்ப, கர்நாடகாவை திருப்திபடுத்த நாடகம் போடுகிறார்.

கற்பிணி உஷாவை காவலர் தாக்கியப்போது இவர் எங்கே போனார்.?

என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி

Leave a Response