தண்ணீர் கேட்டால் துணைவேந்தரா? – கமல் கோபம்

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு (சுமார் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்) தேடல் குழுக்கள் மாற்றப்பட்டும், நீட்டப்பட்டும் கடைசியில் வெளிவரும் செய்தி, இதற்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான்.

இதனால் தமிழகம் கொதிநிலையில் இருக்கிறது. இது தொடர்பாக நடிகர் கமல் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response