ரஜினி அரசியல் குறித்து அறிவுமதி கவிதை

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினி, டிசம்பர் 31,2017 அன்று தெரிவித்தார். அதையொட்டி பாவலர் அறிவுமநி எழுதியுள்ள கவிதை…..

உலகினைத் தமிழுடன்
உறவாக்கு!
ஆர்வேர்ட்
இருக்கையை
அதற்கென
உருவாக்கு!
்்்
உமக்கெனத் தலைமையை
உருவாக்கு!
தமிழ்
எதிர்த்திடும்
எதனையும்
எருவாக்கு!
்்்
அறிவெனில் தமிழினில்
பகுத்தறிவே!
பெரியார்
வகுத்ததை
வழி
மொழி
உமக்குயர்வே!
்்்
ஆன்மீகச் சொல்லாடல்
நூலாடல்!
தமிழர்
வாழ்வோடு
விளையாடல்
வீணாடல்!
்்்
எத்தனைப் போர்களைப்
பார்த்து
விட்டோம்!
தமிழ்
மூளைகள்
விழிப்புடன்
ஆர்த்து
விட்டோம்!
்்்
வருபவர் வரட்டும்
வழி
விடுங்கள்!
மெரினா
கடற்
கரைத்
தெளிவுடன்
செயற்
படுங்கள்!
்்்்
அறிவுமதி
01.01.18

Leave a Response