மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் படம் இயக்கும் ஆதி..!


ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்தப் படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இதில் ஆதி ஹாக்கி வீரராக நடிக்க இருக்கிறார்.

Leave a Response