தமிழக மீனவர்களுக்கு இரண்டு சிக்கல்கள் -ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் காணவில்லை.இது குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனியின் பதிவு…
இரண்டு விதமான சிக்கலுக்குள் தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளார்கள்.

ஒன்று இந்திய அரசுக்கு அவர்களை அப்படியே விட்டு விடுவதில் நிறைய அரசியல் ஆதாயம் இருக்கிறது.

இரண்டு மீட்பு பணி குறித்த போதிய புரிதலோ – பயிற்சியோ இந்திய கடற்படைக்கு இல்லை.

கடந்த முறை சுனாமி தாக்கிய போது சிங்கள, இந்திய அரச எந்திரத்தை விட தமிழீழ அரசு மிக வேகமாக செயற்பட்டு மீட்பு பணிகளை திறம்படச் செய்தது வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக புலிகளின் நிர்வாக அலகை மையப்படுத்தி ‘நடைமுறை அரசு’ ( de facto state) என்ற சொற் பிரயோகம் அப்போதுதான் அனைத்துலக மட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

இதுவே மறுவளமாக புலிகளை எப்படியாவது அழித்தொழித்துவிட வேண்டும் என்ற நிலைக்கு மேற்குலக – இந்திய அரசுகளை தள்ளியது.

குறிப்பாக இந்திய கொள்கை வகுப்பாளர்களால் புலிகளின் இந்த நிர்வாகத் திறனை செரித்துக் கொள்ள முடியவில்லை.

படைத்துறை ரீதியாக மட்டுமல்ல – நிர்வாக ரீதியாகவும் ஒரு ஆளுமையுள்ள ஒரு தேசத்தை ஒரு தனி மனிதன் யாருடைய உதவியுமின்றி கட்டி யெழுப்புவதை பின்பு எப்படித்தான் ஏற்றுக்கொள்வார்கள்?

அழித்தே தம்மை காத்துக் கொள்ளும் ஒரு கொள்கை வகுப்பாளர்களால், ஆக்கபூர்வமான ஒரு நிர்வாகப் பொறிமுறையை வளர்த்துக் கொள்ள முடியாது.

அதுவே தமிழக மீனவர்கள் விடயத்திலும் நடக்கிறது.

அதுதான் அவர்கள் விழுந்து போன கடலில் அப்படியே விடப்பட்டுள்ளார்கள்.

Leave a Response