சந்தானத்துடன் சங்கடமில்லாமல் இணைந்து நடித்த விவேக்..!


விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.. இந்தப்படத்தில் படம் முழும் வரும் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானத்துடன், சீனியர் காமெடி நடிகரான விவேக்கிற்கு செட் ஆனது எப்படி..?

“சிம்பிள்.. இரண்டு பெரிய காமெடி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சரியாக வருமா என நானும் ஆரம்பத்தில் தயங்கினேன்.. ஆனால் சந்தானம் ஹீரோ என்பதால் அவர் காமெடி மட்டுமே பண்ணிக்கொண்டு இருக்க முடியாது. சண்டை, காதல், டூயட் என எல்லா ஏரியாவிலும் சுற்ற வேண்டியிருக்கும். அதனால் சந்தானமும் நானும் இதில் ஏரியா பிரித்துக்கொண்டோம்.. அதனால் எந்த சிக்கலும் இல்லை” என கூறியுள்ளார் விவேக்.

சந்தானத்துடன் லொள்ளுசபா காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் சேதுராமன் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க, லட்டு தின்ன ஆசையா சேது, பவர் ஸ்டார், மயில்சாமி, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..

Leave a Response