
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி குழுவினரை மிரட்டி தம் சித்தாந்தங்களைத் தமிழகத்தில் பரப்ப ஆர் எஸ் எஸ் அமைப்பு முயல்கிறது என்றொரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக மதுரையில் அக்டோபர் 8 அன்று நடக்கவிருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்தை தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர்ராஜூ தொடங்கிவைக்கிறார்.
தமிழக அமைச்சரை அழைத்து அவருக்கான மரியாதை பாதுகாப்பு ஆகியனவற்றைப் பயன்படுத்தி தமிழகத்தில் தங்கள் செல்வாக்கைக் காட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பு முயல்கிறது என்று சொல்கிறார்கள்.


