பலவித வேடங்களில் பரவசமூட்டும் மழலையர் – வேலம்மாள் பள்ளி நவராத்திரி கொலு சுவாரசியங்கள்

ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழா,இந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி துவங்கியது.இவ்விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

சென்னை முகப்பேர் வேலம்மாள் நிறை நிலை மேனிலைப்பள்ளியிலும் நவராத்திரி கொலு வைத்து செப்டம்பர் 22 முதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது செப்டம்பர் 30 வரை நீடிக்கும் என்கிறார்கள்.

இதன்போது, பாலர் வகுப்பு மாணவர்கள் அஷ்டலட்சுமிகளாகவும்,திருமூர்த்திகளாகவும் வேடமிட்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மாணவர்களின் நடனநிகழ்ச்சிகள் மற்றுக் கலைநிகழ்ச்சிகளால் நிகழ்ச்சி மேலும் சிறப்புற்றது.

ஒவ்வொரு நாளும் அம்மன் அலங்காரம் விழாவுக்கு மிகவும் மெருகூட்டுவதாக அனைவரும் சொல்கின்றனர். அதேபோல ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் நவதானிய சுண்டல் மற்றும் இனிப்புப்பொங்கல் விழாவை இனிப்பாக்குகிறது.

வருங்கால தலைமுறைக்கு நம் பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சொல்லும் இவ்விழாவில் ஆசிரியப் பெருமக்களோடு ஏராளமான பெற்றோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

வேலம்மாள் பள்ளியின் இம்முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதென்று பெற்றோர் பாராட்டி மகிழ்கின்றனர்.

Leave a Response